தமிழ் மொழியை பிழையின்றி தக்க வகையில் எழுதச் சொல்லித் தரும் நுால். சரியாக புரிந்து கொண்டு எவ்வாறு தெளிவு பெற வேண்டும் என்பதை தக்க உதாரணங்களுடன் சொல்லித் தருகிறது.
தமிழ் மொழியின் சிறப்பான எழுத்துக்களை பாங்குடன் விவரிக்கிறது. ‘ஒரு – ஓர்’ என்ற சொல் உபயோகம், வல்லெழுத்து மிகும் இடங்கள், ஒருமை – பன்மை வேறுபாடு, சொற்கள் இணையும் போது உண்டாகும் மாற்றம் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எழுத்து வேறுபாடு, உபயோகிக்கும் முறை, இலக்கணம் பட்டியலிட்டு காட்டியிருப்பது தனித்த கவனத்தை கவர்கிறது. பிழை, திருத்தங்கள் பகுதியில் அன்றாடம் பயன்படுத்தும் சரியான சொற்களை சுட்டி புரிய வைக்கிறது. தமிழ் படிக்கும் அனைவருக்கும் உதவும் நுால்.
– ஊஞ்சல் பிரபு