கிரேக்க அறிஞர்கள் உருவாக்கிய கணித கொள்கைகள், அறிவியல் வளர்ச்சியில் அளித்த பங்களிப்பை விவரிக்கும் நுால். பிதாகரஸ், யூக்ளிட், ஆர்கிமிடிஸ், எராடோஸ்தனீஸ் போன்ற கணித அறிஞர்கள் உருவாக்கிய முறைமைகள், தத்துவங்கள், நிரூபணங்களுக்கு விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
கிரேக்க அறிஞர்கள் கண்டறிந்த கணித விதிகள், இன்றைய அறிவியலில் எப்படி பயன்படுகிறது என காட்டுகிறது. கணிதம் அறிந்தவர்களும், அறியாதவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
கணித தத்துவம், கட்டடக்கலை, இயற்பியல் போன்ற துறைகளில் தாக்கம் ஏற்படுத்தியதை குறிப்பிடுகிறது. வரலாற்றுடன் கணித அறிவை இணைக்க விரும்புவோர் படிக்க வேண்டிய நுால்.
– இளங்கோவன்