செல்வந்தராவதற்கான வழிமுறைகளை தெரிவிக்கும் நுால். சொற்ப சம்பளத்தில் சேமித்து, முதலீடு செய்வதற்கான சூழல்களை காட்டுகிறது.
வருமானம் குறைவாக இருந்தால் அதை எப்படி பெருக்க வேண்டும் என வழிகாட்டுகிறது. எதில் முதலீடு செய்தால் பணம் பெருகும்; செல்வந்தராவதற்கு செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி ஆலோசனை தருகிறது.
முன்னேறியவர்களை உதாரணங்களாக காட்டி வழிமுறைகளை விளக்குவதால் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. முதலீட்டில் வரும் ஏற்ற இறக்கங்கள், அபாயம் உள்ள பங்கு சந்தையில் பணம் குவிப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை கற்றுத் தருகிறது. சிறிது சிறிதாய் சேர்த்து பணத்தை பெருக்கும் வழிமுறைகளை உரைக்கிறது. முதலீடுகள் வழியாக முன்னேற வழிகாட்டும் நுால்.
– மதி