உலகில் அதிக நிலப்பரப்பை உடைய நாடுகள் பற்றி கூறும் நுால். ரஷ்யா, கனடா உட்பட, 20 நாடுகளின் விபரங்களை தொகுத்துள்ளது.
ஒவ்வொரு நாட்டின் நிலப்பரப்பு, இயற்கை அமைப்பு, குடியேற்ற நிலை, இனப்பிரிவுகள், மக்கள் தொகை, வரலாறு தரப்பட்டுள்ளது. அரசியல் நிலை, நிர்வாக செயல்பாடு, வெளியுறவு கொள்கை, தமிழர் நிலை என விபரங்கள் உள்ளன.
நாடுகள் சந்திக்கும் சூழலியல் பிரச்னைகளும் கூறப்பட்டுள்ளன. பொருளாதார அடிப்படையில் மக்கள் வாழ்க்கை தரம் பற்றி உரைக்கிறது. வளங்கள், உற்பத்தி குறித்தும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மாணவர்களுக்கு பொது அறிவை வளர்க்க ஏதுவாக தொகுத்து தரப்பட்டுள்ளது. உலகில் முக்கிய நாடுகள் பற்றி அறிய உதவும் நுால்.
– மதி