இஸ்லாம் மார்க்கத்தின் தனித்தன்மையை தொகுத்து புரியும்படி படைக்கப்பட்டுள்ள நுால். சமயத்தை ஒட்டியதாக அமைந்திருந்தாலும் பொதுமைக் கருத்துகளும் வலு சேர்க்கின்றன.
இறை வழிபாடு எப்படிபட்டதாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விளக்கங்கள் சிந்தனையை துாண்டுகின்றன. இடர்ப்பாடுகளை கடந்து, நபிகள் தலைமையில் இஸ்லாம் நிலைபெற்றதை விளக்குகிறது. ஒவ்வொருவரையும் பரிவோடு நடத்தும் பொதுமை நோக்கை கூறுகிறது.
குரானின் அடிப்படை நோக்கத்தையும், தன்னிலை மறந்து ஓதும் சூழலையும் புரியச் செய்கிறது. இஸ்லாம் மார்க்க ஐந்து துாண்கள் பற்றிய கருத்தோட்டத்தை தெளிவாக முன்வைக்கிறது. எளிய நடையிலான கோட்பாடு விளக்க நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு