குறைந்த மூலதனத்தில் தொழில் துவங்கி, வெற்றி அடைந்தோரின் வாழ்க்கை கதைகளை தொகுத்து தரும் நுால். ஆர்வம், அர்ப்பணிப்பு, உழைப்பு தான் வெற்றிக்கு உதவும் மந்திரம் என எடுத்துரைக்கிறது.
தமிழகத்தில் முக்கிய தொழில் நிறுவனங்களையும், அவற்றின் வளர்ச்சிக்கு பின் இருந்த உழைப்பையும் எடுத்து காட்டுகிறது. இத்தனை வெற்றியாளர்களா என வியக்க வைக்கிறது. தொழில் துவங்கி வென்றதை மட்டுமின்றி, அதற்கான போராட்டத்தையும் கண்முன் காட்டுகிறது.
கோடிக்கணக்கில் பணம் இருந்தால் தான், தொழில் துவங்கி வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தை மாற்றும் வகையில் உள்ளது. எப்படி உழைத்தால் எந்த இடத்துக்கு போகலாம் என வழிகாட்டுகிறது. இளைஞர்களின் தொழில் முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் நுால்.
– ஒளி