மிகுந்த கவனமுடன் கருத்துக்களை வெளிப்படுத்தும் வெண்பா பாடல்கள்தொகுப்பு நுால். சொற்சுவையும், பொருட்சுவையும் விஞ்சி நிற்க, கற்கண்டு கட்டிகளை அடுக்கியது போல், 72 தலைப்புகளில் உள்ளம் கவர்கிறது.
காமத்துப்பாலை கண்ணியமுடன் காட்டினான் வள்ளுவன். அந்த உயர்நடைக்கு சற்றும் குறையாமல் தனித்துவமாக, ‘தழுவுவதை சற்றே தடை செய் தணல் வீழ் புழுவாய் தலைவன் புலம்பி’ என உரைக்கிறது.
நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு முதல் குரல் கொடுத்தது காமராஜர் என்பதை பாடலில் தெளிவுபடுத்துகிறது. சமுதாய அவலங்களை, ‘பூசணியும் சோற்றுள் புதைபடு ஊழல் எல்லாம் காசு தந்தால் சட்டம் கரைத்து விடும்’ என நயத்துடன் பதிவு செய்துள்ள பாடல் நுால்.
– டாக்டர் கார்முகிலோன்