பணத்தாசையால் சீரழிந்து, வாழ்வின் இறுதிக் காலத்தில் சொந்த ஊருக்கு வருபவரை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள நாடக நுால்.
காதலித்து கைப்பிடித்த பெண்ணையும், ஊனமுற்ற குழந்தையையும் கைவிட்டு, பணத்தாசையுடன் மாமன் மகளை திருமணம் செய்து ஆமதாபாதில் வாழ்கிறார் சபேசன். அங்கு, போதைக்கு அடிமையாகும் மகன், மகள் தந்த பாடங்கள், பட்டறிவுகள் சிந்தனையை துாண்டுகின்றன.
முதல் மனைவியையும், ஊனமுற்ற மகனையும் 25 ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கிறார். அவர்களுக்கு சொத்தில் ஒரு பாதியை கொடுத்தபோது வாங்க மறுத்து, இல்லாதவருக்கு கொடுத்து உதவ பணிக்கின்றனர். பிராயசித்தமாக ஆதரவற்றோர் இல்லம் துவங்குகிறார்.
இவ்வாறு விறுவிறுப்புடன் அமைந்துள்ள நாடக நுால்.
– புலவர் சு.மதியழகன்