தமிழகத்தில் நடந்த கொலை வழக்குகளின் பின்னணியை ஆராயும் ஆவண நுால். அதிர்ச்சியை ஏற்படுத்திய வழக்குகளில் பின்னணி, நுட்பமான விசாரணைகள், நீதிமன்ற தீர்ப்புகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
சிந்தனையை துாண்டும் விதமாக அதிர்ச்சி தந்த கொலை வழக்குகளின் பின்னணியை அலசுகிறது. ஒவ்வொரு வழக்கிலும் நீதிமன்றம் எடுத்த நடவடிக்கைகள், சமூகம் காட்டிய எதிர்வினைகளை பதிவு செய்துள்ளது.
குற்றவியல் சட்டம், போலீஸ் விசாரணை முறைகள், நீதிமன்ற நடைமுறை பற்றிய விளக்கங்கள் சாதாரண வாசகர்களும் விரும்பி வாசிக்கத் துாண்டும் வகையில் மிக எளிமையாக தரப்பட்டுள்ளது. அதிர்ச்சி தந்த குற்ற வழக்குகளின் ஆவண நுால்.
-– இளங்கோவன்