கேரள திரைத்துறையில் நடந்த பாலியல் வன்கொடுமை குறித்த விசாரணைக்குழுவின் அறிக்கை, நுாலாக்கம் பெற்றுள்ளது.
ஒட்டுமொத்த கவனத்தையும் கேரளா மீது திரும்ப வைத்தது, அங்கு நடந்த பாலியல் அத்துமீறல் சம்பவம். ஆள் கடத்தல், அதிகார அராஜகம், பண மோசடி, சட்டவிரோத செயல்கள் என பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து உண்மையை அறிய, நீதிபதி ஹேமா தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு, பல தரப்பிலும் விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தது. அதில், அதிர்ச்சி தரும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள திடுக்கிடும் தகவல்களால் ஆனது. பெண்களுக்கு பணி பாதுகாப்பற்ற நிலை, அடிப்படை வசதி குறைபாடு, ஊதிய முரண் என பலவற்றை அலசுகிறது இந்த புத்தகம்.
– ராம்