இந்திய வரலாற்றில் கொந்தளிப்பான காலத்தை நினைவுபடுத்தும் நுால். சுதந்திர போராட்ட வரலாறு, சமூகவியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை புத்தகம் முழுதும் காண முடிகிறது.
துருக்கியில் புகழ் பெற்ற பெண் எழுத்தாளர் ஹாலித் எடிப், 1935ல் இந்தியாவில் பயணம் செய்தார். அப்போது நேரில் பார்த்த நிகழ்வுகளை சுவாரசியம் குன்றாமல் பதிவு செய்துள்ளார். இரண்டாண்டுகள் பல இடங்களில் பலரை சந்தித்த அனுபவங்களும் பதிவாகியுள்ளன.
காந்திஜியை சந்தித்தது, அவரது பிரார்த்தனை கூட்டத்தை கூர்ந்து அவதானித்தது நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது. நேரு, சரோஜினியுடனான அனுபவங்களும் சிந்தனையை துாண்டுகின்றன. வரலாறு, அரசியல், சமூகம், பண்பாடு, மதம் என பல தளங்களையும் காட்டும் நுால்.
– ஒளி