தமிழ்த் திரை இசை வரலாற்றில் திருப்புமுனை உருவாக்கிய பாடல்களை ஆய்வு செய்யும் நுால்.
திரைப்படப்பாடல்களின் உருவாக்கம், அவற்றின் சுவாரசியமான பின்னணி, தமிழ்த் திரைப்படங்களில் இசை தாக்கத்தை விவரிக்கிறது. பாடல்களின் வரலாறு, அவற்றின் சிறப்பம்சங்கள், பாடலாசிரியர்களின் பங்களிப்பு, இசையமைப்பாளர்களின் மேன்மையை அலசுகிறது.
தமிழ்த் திரைப்படப் பாடல் வரலாற்றை அறிவதற்கு, தாக்கத்தை புரிந்துகொள்வதற்கு பயனுள்ளதாக இருக்கும். திரை ஆர்வலர்களுக்கு ஒரு அரிய பொக்கிஷம். சில பகுதிகள் தொழில்நுட்ப விபரங்களையும் உள்ளடக்கியுள்ளது. திரைப்படப்பாடல்களை நேசிப்போர் வாசிக்க வேண்டிய புத்தகம்.
– இளங்கோவன்