தன்னம்பிக்கை தந்து, வெற்றிக்கு வழிகாட்டும் நுால். அலைபேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; மூளை மனதிற்கு அடிமையாகக் கூடாது என அறிவுறுத்துகிறது.
தளராத நம்பிக்கை, திட்டமிடல், கடின உழைப்பு, விடாமுயற்சி, நேரத்தின் அருமை, ஆரோக்கியம் என்ற ஆறும் வெற்றிக்கு அடிப்படை என்பதை விளக்குகிறது. விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கை நிகழ்வுகள் பல பகுதிகளில் மேற்கோளாக காட்டப்பட்டுள்ளன. மின்விளக்கு, கிராமபோன், சினிமா கேமரா, பாதுகாப்பு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதை கூறுகிறது.
சுவாமி விவேகானந்தர், ரமணர், ஓஷோ சிந்தனைகளுடன் எண்ணம் நேர் மறையாக இருக்க வேண்டும் என்கிறது. வள்ளுவரின் குறள்களையும் விளக்கும் நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து