ஜோதிடப் பலன்கள், ஜோதிட கணித சாஸ்திரம் பற்றி உரைக்கும் பழைய நுால்.
கிரக சாரங்கள், கிரக சார பலன் அட்டவணைகளோடு, பல பலன்களையும் விவரிக்கிறது. பராசரரால் சொல்லப்பட்ட கணக்குப்படி, ஏராளமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. பூமியில் மேற்கு முகமாக, 5,000 நதிகள் இருந்ததாக குறிப்பிடுகிறது. சூரிய கோளத்தில் காணப்படும் கருப்பு புள்ளிக்கு கேது என பெயர் சூட்டியுள்ளது. வானியல் நிறம், ரூபத்தால் ஆண்டு பலனை அறியலாம் என்கிறது.
கோள்களில் ஏற்படும் தோற்ற மாற்றங்கள் எத்தகைய பாதிப்புகளை பூமியில் ஏற்படுத்தும் என்று விளக்குகிறது. ஜோதிட கலையை வரும் முன் உரைத்து தெளிவு தருவதாக கூறுகிறது. ஜோசியர்களுக்கு உதவும் நுால்.
– டாக்டர் கார்முகிலோன்