ஆரோக்கியமாக வாழும் வழி வகையை எடுத்துரைக்கும் நுால். எந்த வகையில் உண்டால் உடலில் என்ன மாற்றம் நிகழும் என்பதை எடுத்துரைக்கிறது.
தாவரங்களின் தோற்றம் குறித்து விவரித்து சிறப்பியல்புகளை எடுத்துரைக்கிறது. தாவரத்துக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பை புலப்படுத்தி நலவாழ்வுக்கு உதவும் விபரங்களை தருகிறது. உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை தெளிவாக தருகிறது.
மனிதனுக்கு ஏற்படும் பலவீனங்களை தாவரங்கள் மாற்றி அமைப்பது குறித்து விரிவாக தகவல்களை தருகிறது. பாதிப்புகளில் இருந்து விடுபடும் வழிமுறையும், நடைமுறையும் தரப்பட்டுள்ளன. உடல் பிரச்னைகளை தீர்ப்பது பற்றி தெளிவாக எடுத்துரைக்கிறது. நலமுடன் வாழ்வதற்கு உரிய வழிமுறைகளை, 22 அத்தியாயங்களில் விளக்கும் நுால்.
– மதி