நோய்கள் உண்டாவதற்கான காரணங்களும், மருத்துவ முறைகளும் எளிமையாக கூறப்பட்டுள்ள நுால்.
இயற்கை மூலிகைகளை கொண்டு நோய் தீர்க்கும் வழிமுறை கூறப்பட்டுள்ளது. தற்காலத்தில் தோன்றும் புதுவித நோய்களை கண்டறியும் வழிமுறைகளும் உள்ளன. ஒரு நோய்க்கு மருந்து குறிப்பிட்ட நாள் வரை தொடர்ந்தால் மட்டுமே பலன் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
தவறான உணவுப் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகளை பற்றி விளக்கம் உள்ளது. போதைப் பொருள் பழக்கத்தால் உண்டாகும் தீமைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. நீரிழிவு நோய் பாதிப்புகள் தனி தலைப்பில் உள்ளன. வயிறு தொடர்பான நோய்களுக்கு எளிய மருத்துவ முறைகள் கூறப்பட்டுள்ளன. மருத்துவம் சார்ந்த தகவல்களை உள்ளடக்கிய நுால்.
– முகில்குமரன்