ஜோதிடம் குறித்த நுால். ஜோதிடம் சொல்வோருக்கு, ஞானம், இறை பக்தி, நல்லொழுக்கம், இரக்க குணம் வேண்டும் என்கிறது.
ஜோதிடம் கேட்போருக்கு, நம்பிக்கை, மரியாதை, இறை நம்பிக்கை வேண்டும் என குறிப்பிடுகிறது. தமிழ் வருடங்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது.
லக்னம் கணிப்பது, கிரகம் அடைப்பது, நவாம்சம் அடக்கும் முறை, ஜாதக பலன் சொல்லும் முறை, தசா புத்தி பலன், திருமணப் பொருத்தம் பார்த்தல் விளக்கப்பட்டுள்ளன. மாங்கல்ய தோஷம் விபரம், நோய்கள் விபரம், கொடி சுற்றிப் பிறக்கும் குழந்தை, இரட்டைப் பிள்ளை குறித்த விவரங்கள் உள்ளன.
மனிதன் அடியின் பலன் சொல்லப்பட்டுள்ளது. சுலபமாக ஜோதிடம் அறிய உதவும் நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து