இந்திய பகுதிகளை பல்வேறு காலத்தில் ஆட்சி செய்த அரசியர் பற்றிய விபரங்களை கூறும் நுால். சமூகத்திலும், அதிகாரத்திலும் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தியது குறித்து கூறப்பட்டுள்ளது.
இந்திய வரலாறு பெரும்பகுதியும் மன்னர்களையே அறியத்தந்துள்ளது. இந்த புத்தகம், ஆட்சியில் அதிகாரம் செலுத்திய பெண்களின் விபரங்களை உரிய ஆதாரங்களுடன் தந்துள்ளது. செய்திகள் வியப்பூட்டும் வண்ணம் உள்ளன.
சென்ன பைரதேவி, அபக்கா சவுதா, கிட்டூர் ராணி சென்னம்மா, அகல்யாபாய் கோல்கர், தாராபாய் போன்சுலே, அர்சல் மகல் என, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆட்சி செலுத்திய ராணிகள் பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஆட்சிகால விபரங்களும் தொகுத்து தரப்பட்டுள்ளன. அரசியர் பற்றி அறியத்தரும் நுால்.
– ராம்