ஜோதிட கணிதத்தின் அடிப்படையை விளக்கும் நுால். மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.
மாதப்பிறப்பும், கிழமையும் அறிவது பற்றி தெளிவுபடுத்தியுள்ளது. தேதிக்குரிய கிழமையை தேடிக் கண்டுபிடிப்பதை விவரிக்கிறது. குறிப்பிட்ட வருஷத்திற்கு, கிழமையை தெரிவிக்கும் ஜாபிதா என்ற அட்டவணை தரப்பட்டுள்ளது. இது வியப்பளிப்பதாய் உள்ளது.
தமிழ் தேதி, இங்கிலீஷ் தேதி என கிழமையை எப்படி கண்டுபிடிப்பது என்பதை விவரித்து சொல்கிறது. குறிப்பிட்ட தினத்திற்கான பஞ்சாங்க குறிப்பை கணித்தறியும் செயல்முறை விளக்கப்பட்டுள்ளது. ஐந்து பாகங்களாக உள்ளது. மறுபதிப்பாக உள்ள இப்புத்தகம், ஜோதிட கலையை அறியத்தரும் பொக்கிஷமாக விளங்குகிறது.
– டாக்டர் கார்முகிலோன்