இயற்கை வேளாண்மை புரட்சியில் நம்மாழ்வார், ஜெயராமன் பங்களிப்பு குறித்து விளக்கியுள்ள நுால்.
இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்க கையாண்ட வழிமுறைகளை அறிய தருகிறது. பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த ஜெயராமனின் பணி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. நஞ்சில்லா விவசாயமே நம்மாழ்வாரையும், ஜெயராமனையும் இணைத்ததாக குறிப்பிடுகிறது.
விவசாய நிலத்தை ரசாயன உரங்களிட்டு மலடாக்க வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் விதைநெல் திருவிழா நடத்தப்படுவது, ஆடிப் பட்டத்தில் பயிர் செய்தால் கிடைக்கும் நன்மைகள் கூறப்பட்டு உள்ளன. பறவைகளே இயற்கை பூச்சிக்கொல்லியாக செயல்படுவது பற்றியும் அறிய உதவும் நுால்.
– முகில்குமரன்