தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சியை பிடித்த நிகழ்வை பதிவு செய்யும் நுால்.
தமிழக சட்டப் பேரவை வரலாறு துவங்கி, சென்னை மாகாண முதல் பொதுத் தேர்தல், திராவிடக் கட்சிகளின் தோற்றம், வளர்ச்சி குறித்த ஆவணங்கள் தொகுத்து தரப்பட்டிருக்கிறது. நிகழ்வுகள், 60 அத்தியாயங்களில் சொல்லப்பட்டுள்ளன. தமிழக அரசியலில் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை முன்வைக்கிறது.
தி.மு.க., துவக்கம், அண்ணாதுரை முழக்கம், ஆட்சியை பிடித்தது விவரிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக சமீபத்திய நிகழ்வுகள் வரை, விரிவாகப் பேசப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை வரலாற்றை விமர்சனப் பார்வையில் முன் வைக்கிறது. தமிழக அரசியல் நிகழ்வுகளை அறிய உதவும் நுால்.
– ஊஞ்சல் பிரபு