தடுப்பு மருந்து குறித்த விபரங்களை எடுத்துரைக்கும் நுால்.
விஞ்ஞானிகள் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து தயாரித்த நிகழ்வுகள் வரலாற்று பூர்வமாக விளக்கப்பட்டுள்ளன. நோய் தாக்கிய பின் சிகிச்சை பெறுவதை விட, வராமல் தடுக்க உதவும் மருந்துகளே மேன்மை என விழிப்புணர்வு ஊட்டுகிறது. உரிய நேரத்தில் தடுப்பு மருந்து எடுத்தால் கிடைக்கும் பயன்களை எடுத்து கூறுகிறது.
தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்த அறிஞர்களின் வாழ்க்கை குறிப்பு தனித்துவமாக தரப்பட்டுள்ளது. நோய்கள் பற்றி விளக்கி விழிப்புணர்வை ஊட்டுகிறது. நோய் அணுகாமல் ஆரோக்கியமுடன் வாழ வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது. உரிய படங்களுடன், 24 தலைப்புகளில் தடுப்பு மருத்துவத்தின் சிறப்புகளை தருகிறது. மருத்துவ விழிப்புணர்வு ஊட்டும் முக்கிய நுால்.
– ராம்