மனித உடலின் இயக்கம் பற்றிய நுால்.
உடல் உறுப்புகளை கண்டறியும் முயற்சிகளை வரலாற்று ரீதியான தகவல்களுடன் விளக்குகிறது. அடுத்து உடலின் கட்டுமானம் பற்றி தெளிவாக தருகிறது. உடல் இயக்கமே உயிரின் ஆற்றல் என நிறுவுகிறது. ரத்த சுழற்சியின் செயல்பாடு, கழிவு அகற்றும் உறுப்புகள், அவற்றின் செயல்பாடு பற்றிய விபரங்களை அறியத்தருகிறது.
நாளமில்லா சுரப்பிகள், உலகத்தை உணர வைக்கிறஐம்புலன்களின் செயல்பாடு பற்றி விளக்குகிறது. மூக்கின் உடற்கூறு, வாய், தொண்டையின் செயல்பாடு பற்றி தெளிவை ஏற்படுத்துகிறது. உடல் இயக்கத்தில் வெப்பம், பிராண வாயுவின் தேவையை எடுத்துரைக்கிறது. உடல் இயக்கத்தை கட்டுப்படுத்தும் மூளையின் செயல்பாடு பற்றியும் அறியத் தருகிறது. உடலை பற்றி விழிப்புணர்வு ஊட்டும் நுால்.
– ஒளி