கடையெழு வள்ளல்களில் ஒருவனான பாரி வரலாற்றை மூவேந்தர்களுடன் தொடர்புபடுத்தி ஆய்வு தகவல்களை தொகுத்தளிக்கும் நுால்.
பாரியின் காலத்தில் வாழ்ந்த மூவேந்தர்கள் பற்றிய தகவல்களை அறியச் செய்கிறது. பகமையால் ஏற்பட்ட கொடும் விளைவுகளை பழந்தமிழ்ச் செய்யுள்களின் மேற்கோள்களோடு விளக்கப்பட்டுள்ளன.
கடையெழு வள்ளல்களைப் பற்றிய விவாதங்களுடன் வரலாற்றுக் குறிப்புகளும் தரப்பட்டுள்ளன. பாரியின் ஆட்சி சிறப்பு, கொடைப்பண்பு, புகழ், வீரம், பறம்பு மலையின் சிறப்பு சார்ந்த அரிய வரலாற்றுச் செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விரிவான வரலாற்று தகவல்கள் பயனுள்ளவை. ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்ட புத்தக பட்டியல் அடிக்குறிப்புகளாக தரப்பட்டுள்ளது.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு