நாட்டுப்புற தெய்வ வரலாறு கூறும் நுால். கோவில் தோற்றம், பரிவாரத் தெய்வங்கள், வழிபாட்டில் தொடர்புடைய கோவில்கள், குல தெய்வங்கள் என விரிவாக செய்திகள் உள்ளன.
சந்தனமாரி கோவில் பூக்குழி திருவிழாவில் முதலில் அரண்மனை கிடாய் வெட்டப்படுகிறது. இதன் வழியாக இங்கு அரண்மனை இருந்தது தெரிய வருகிறது. சப்பர ஊர்வலம், பூக்குழி இறங்குதல், அக்னிகாவடி, முளைப்பாரி எடுத்தல் பற்றி செய்திகள் சொல்லப்பட்டுள்ளன.
சமுதாய அடிப்படையில் குல தெய்வங்களும், குடும்ப தெய்வங்களும் உள்ளதை குறிப்பிடுகிறது. அக்னி சட்டி வழிபாட்டில் இஸ்லாமியரும் கலந்து கொள்வதை கூறுகிறது. பக்தி மணக்கும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்