விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் அறிவியல் கருத்துகளின் துணையோடு வரலாறு கலந்து பின்னப்பட்ட நாவல் நுால். கதாபாத்திரங்கள் உண்மையாகவும், நிகழ்வுகள் கற்பனையாகவும் சேர்க்கப்பட்டுள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அணையை ஆய்வு செய்ய வரும் கணேசன், நீர்ச் சூழலில் சிக்கி மயக்கம் அடைகிறான். அந்த நிலையில் ஆழ்மனம் கடந்த காலத்தில் சஞ்சரிப்பதாக படைக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானி ஐன்ஸ்டீன் தத்துவ அடிப்படையில் கடந்த காலத்தில் உலவிய நிஜ மாந்தர்களை சந்திப்பதை காட்சிப்படுத்துகிறது. புனைவின் வழியாக வரலாற்றின் குறுக்கு வெட்டு தோற்றத்தைக் காட்டுகிறது. சம கால வரலாற்றையும் பதிவு செய்துள்ளது. வரலாற்றில் விருப்பம் கொள்ளச் செய்வதும்,வாழ்வை புனைவாக்க முயற்சிப்பதுமாக உள்ள நாவல்.
– ஊஞ்சல் பிரபு