மிகச்சிறிய நாட்டில் பிறந்து வல்லரசை எதிர்த்து தியாக மரணமடைந்த சே குவேரா வாழ்க்கை வரலாற்று நுால்.
தன்னலமின்மை, மனிதாபிமானம், நன்றியுணர்வு, அஞ்சாமை, செயல் வேகம் போன்ற நற்பண்புகளுடன் வாழ்ந்ததை குறிப்பிட்டுள்ளது. கியூபா விடுதலை போராட்டத்தில் பங்கேற்றது குறித்த விபரங்களை தருகிறது. மக்கள் மனதில் மேன்மையாக இடம் பெற்றிருந்ததை கோடிட்டு காட்டுகிறது.
அமெரிக்க அரசுக்கு எதிராக பேராடியதை விவரிக்கிறது. புரட்சியின் கனலாய் எரிந்து தியாகச் சுடராக எழுந்தது பற்றி கூறப்பட்டுள்ளது. கியூபா விடுதலைப் போரில் காஸ்ட்ரோவுடன் கொண்டிருந்த நட்பு செயல்பாட்டை தெளிவாக தருகிறது. மாபெரும் புரட்சி வீரனின் தியாக வாழ்க்கை நிகழ்வுகளை சித்தரிக்கும் அற்புதமான நுால்.
– ஒளி