கொங்கு பகுதியில் வாழ்ந்த பிரமுகர்களை அறிமுகம் செய்யும் நுால். அரசியல்வாதி, தொழில் அதிபர், சமுதாய பார்வை உள்ளோரை குறிப்பிடுகிறது.
சிறுவயதிலே சந்தித்தோர் மட்டுமல்லாமல் முதிய வயதிலும் அருந்தொண்டு செய்தோர் பற்றிய வரலாறும் தரப்பட்டுள்ளது. எப்படி வளர்ந்தனர், எந்த விதமாக போராடினர், எந்த வகையில் உயர்ந்தனர் என்பதை எடுத்துரைக்கிறது.
பொள்ளாச்சி நா.மகாலிங்கத்தை, அவரது தந்தை நாச்சிமுத்து கவுண்டர் நிறுவனத்தில் சாதாரண பணியாளராக சேர்த்து வேலை கற்பித்ததால், பின்னாளில் பெரிய தொழிலதிபராக உயர முடிந்ததை தெரிவிக்கிறது. இதுபோல் முக்கிய பிரமுகர்கள் வாழ்வை அறிமுகம் செய்து நம்பிக்கையூட்டுகிறது. கொங்கு மண்டலத்தின் சிறப்புகளை சொல்லும் புத்தகம்.
-– சீத்தலைச்சாத்தன்