சிறுவர்களுக்காக உமையவன் உருவாக்கிய படைப்புகளை விமர்சனப்பூர்வமாக அணுகி அறிமுகம் செய்யும் வகையில் கருத்தை முன் வைக்கும் நுால்.
மொத்தம் 1-0 படைப்புகள் குறித்த விமர்சன கட்டுரைகளை உடையது. இனிப்பு மாயாவி, பறக்கும்யானையும் பேசும் பூக்களும், மந்திரமலை, தங்க அருவி ரகசியம், ஆகாய வீடு, அந்தியில் மலர்ந்த மொட்டுகள், மழலை உலகு, குழலினிது யாழினிது, கிணற்று பூதம் ஆகியவற்றில் படைப்புக்கலையின் பாய்ச்சலை ஆராய்ந்து எடுத்துரைக்கிறது.
இவற்றை தவிர, ‘ஆதிரனின் ஆலாபனைகள்’ என்ற சிறுவர் பாடல் தொகுப்பு பற்றியும் விமர்சன பார்வையை தருகிறது. படைப்புகளை பல்வேறு கோணங்களில் அணுகி கருத்துகளை வெளிப்படுத்துகிறது. சிறுவர் இலக்கியத்தை அலசும் நுால்.
– ராம்