விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2, (பக்கம்: 254. விலை: ரூ.80)
இல்லற வாழ்வில் எல்லா செல்வங்களும் பல்கிப் பெருக, இனிது வாழ வேள்வி - வழிபாட்டின் நெறிமுறைகளை, விளக்கங்களை எடுத்துச் சொல்வது இப்புத்தகம்.ரிக் வேதத்தில் நம் பொருட்களை தேவர்களிடம் சேர்த்து, குழந்தையிடம் பெற்றோர் காட்டும் அன்போடு அத்தேவர்கள் வரமாக அளிப்பதை அக்னி தேவன் கொண்டு வந்து சேர்க்கிறான் (பக்.16) என்பதை ஆசிரியர் தெளிவாக்குகிறார்.இடையூறு நீங்க, நினைத்த காரியம் கை கூட, நோய் விலக, வீட்டுப் பிரச்னை நீங்க, மண வாழ்க்கை அமைய, குடும்ப ஒற்றுமை ஓங்க என்றுள்ள பட்டியலில் எல்லாருடைய விருப்பமும் அடங்கும்."வேதம் வல்லாரைத் தொண்டு விண்ணோர் திருப்பாதம் வணங்கி' என்ற ஆழ்வாரின் அருள்வாக்குப்படி ஒவ்வொருவரும் முற்பட்டாலும், இந்நூலில் குறிப்பிட்டபடி எல்லாம் திகழ்கிறதா என வாசகர்கள் நெறிப்படுத்தலாம், நிறைவுறலாம்.வேள்வி மாடத்தில் பெண்கள் வரலாமா? படித்த படிப்புக்கேற்ற வேலை அமைய வேண்டாமா? ஹோம மந்திரம் சொல்வது என்ன? இப்படி பல விஷயங்கள் வாசகர்களை ஈர்த்த வண்ணம் உள்ளன.