குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 208)
கட்டுரை ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல், இந்நூலில் உள்ள 100 கட்டுரைகளும், நாட்டுப் பற்று, சமூக உணர்வு, தியாக சிந்தனை, கடின உழைப்பு, தன்னம்பிக் கை, மனித நேயம், உலகப் பார்வை ஆகியவை படிப்போர் நெஞ்சங்களில் பதிய வைக்கும் வகையில் அமைந்துள்ளன.சுதந்திரப் போராட்டம், உலகப் போர், அறிவியல் அற்புதங்கள், நாட்டை உலுக்கிய புரட்சிகள் ஆகிய பல தரப்பட்ட விஷயங்கள், அவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட மனிதர்கள் பற்றி எல்லாம், சுருக்கமாக, அதே நேரத்தில் அவசியமான தகவல்கள் அனைத்தையும், சுவைபட, எளிய தமிழ் நடையில் தொகுத்து வழங்கியுள்ளார். விடுதலைப் போராட்ட வீரர் பாஷ்யம், கணித மேதை ராமானுஜன், சுவாமி விவேகானந்தர், ஜி.சுப்ரமணிய ஐயர், வ.உ.சி., டார்வின் ஆகியோர் பற்றிய கட்டுரைகளில் பல புதிய தகவல்கள் உள்ளன. பொது உடைமைக் கொள்கையாளரான ஆசிரியர் தனது சொந்தக் கருத்துக்களை புகுத்தாமல், உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொல்லியுள்ள நேர்மை பாராட்டுக்குரியது. கட்டுரைகள் மிகச் சிறியதாக இருப்பதால் வாசகர்கள் சிரமப்படாமல் நிறைய தகவல்களைப் படிக்கலாம். இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.