வெளியீடு: அழகு பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2 வது தெரு, இராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை-600 049. பக்கங்கள்: 288. சித்தர்கள் அழியும் மனித உடலை அழியா கற்ப தேகமாக ஆக்கிக் கொள்வதை முக்கிய கடமையாகக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு சித்தரும் ஒவ்வொரு வகையில் தங்கள் உடலை கற்ப தேகமாக மாற்றிக் கொண்டனர். அது சித்தர்களின் பரம ரகசியம். கற்ப உடலாக மாற்றும் முறை பற்றி அவர்கள் பாடிச் சென்ற கற்ப சூத்திரங்களைத் தேடி எடுத்து பூக்களைத் தொடுத்து மாலையாக்கியது போன்று ஒரே தொகுதியாக இங்கே படைத்துள்ளோம். கற்ப உடல் பற்றிய இந்த ரகசியங்களில் சிந்திய சில துளிகளே இந்த கற்பசூத்திரம். கற்ப சூத்திரம் மிகச் சுருக்கமானது, புரிந்துகொள்ளக் கடினமானது. அந்தக் கடின சூத்திரத்திற்கு முழு உரை செய்ய முடியா விட்டாலும் ஒவ்வொன்றுக்கும் சிறிய அறிமுக உரைகள் தந்து அதன் கருத்தை உணர்த்தச் செய்த முயற்சியே இந்நூல். சித்தர் பாடல்களின் முழுத் தொகுப்பையும் வெளியிடும் முயற்சியின் ஒரு பகுதியே இந்த கற்ப சூத்திரம்.