இது நம் வாழிவின் பிரதிபலிப்பு. வெளியீடு: கீதம் பப்ளிகேஷன்ஸ்,3/3, பத்மாவதி அவென்யூ,திருமலைநகர் அனெக்ஸ், பெருங்குடி, சென்னை-96. பக்கங்கள்: 86. இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்வினை பிரதிபலிக்கும் விதமாக வந்துள்ள இந்நூல் மிகவும் பயனானது. மரம்-மனிதன்-அழகு öன்று மனிதனை மையப்படுத்தி இயற்கையில் தொடங்கி மனித வாழ்வில் மரம் எவ்வாறெல்லாம் பிணைந்து கிடக்கிறது என்பதை அழகாக கற்றறிந்த அறிவால் எட்டிச் சிந்தித்திருக்கிறார் ஆசிரியர் அவர்கள். அழகு பற்றி இப்படி அழகாக அழுதமுடியுமா? என்று வியக்க வைக்கிறார் ஆசிரியர். நல்ல தகவல்களைச் சான்றாக மேற்கோள்காட்டி கருத்துக்களை மனதில் பதியம் போடும் முயற்சி பாராட்டுக்குரியது.