இது மனிதனின் மற்றொரு பகுதி. வெளியீடு: கீதம் பப்ளிகேஷன்ஸ்,3/3, பத்மாவதி அவென்யூ,திருமலைநகர் அனெக்ஸ், பெருங்குடி, சென்னை-96. பக்கங்கள்: 104. பேசும் பொம்மைகள் எனும் இந்நூல் இரண்டு பகுதிகளாக எழுதப்பட்ட நூல். முதல் பகுதி பொம்மைகளைப் பற்றியும், இரண்டாவது பகுதி இருபெரும் நெருப்பு என்ற தத்துவத்தை உள்ளடக்கியதான ஆறாப்பசியும் அணையா அடுப்பும் என்பதைப் பற்றியும் எழுதப்பட்ட சிறப்பான நூல். பொம்மைகள் பற்றி இவ்வளவு செய்திகளா? என்று நம்மை வியக்க வைக்கும் அளவிற்கு எழுதப்பட்டுள்ளது. இந்நூலின் இரண்டாம் பகுதியான ஆறாப்பசியும் அணையாஅடுப்பும் என்கிற கட்டுரை, வயிற்றுப் பசி என்னும் நெருப்பையும் அப்பசியைப் போக்க உதவும் உணவை சமைக்க உதவும் நெருப்பையும் களமாகக் கொண்டு அமைந்துள்ளது.