கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
அம்பேத்கரும், ஈ.வே.ராவும் வாழ்ந்த காலத்தில்தான் கே.ஆர்.நாராயணனும், அப்துல் கலாமும் தங்கள் பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடித்து பணியிலும் சேர்ந்து விட்டனர். இவர்கள் பட்ட கஷ்டங்கள் பல. அரசு உதவித்தொகை பெறவில்லை. வாழ்வில் ஒரு நல்ல நிலையை அடைய முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே இவர்களிடம் இருந்தது. கே.ஆர்.நாராயணன் நாளிதழ்களில் பணிபுரிந்து படிப்பிற்கும் தேர்விற்கும் கட்டணம் செலுத்தினார். அப்துல் கலாம் தனது குடும்பத்தினர் தந்த நகைகளைப் பணமாக மாற்றிக் கட்டணம் கட்டினார். உயரம் அதிகம் இல்லாத காணத்தால் விமானியாக முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், நல்ல நிலையை அடைய முடியும் என்ற தனது நம்பிக்கையிலிருந்து அப்துல் கலாம் பின்வாங்கவில்லை. இதனால்தான் இந்த இரு மனிதர்களின் முடியும் என்ற நம்பிக்கை, ஒரு நாட்டின் ஜனாதிபதியாக ஆகும் அளவிற்கு இருவரையும் உயர்த்தி பெருமைப்படுத்தியது.
சுய முன்னேற்றக் கட்டுரைகள் அடங்கிய அருமையான புத்தகம்.