அட்சரா பப்ளிகேஷன்ஸ், எண்-5ஏ/13, கனகராஜா தெரு, ராஜகீழ்ப்பாக்கம், சென்னை-600 073. அலைபேசி: 99446 20428.
இந்தியப் பாரம்பரியம் மானுட வாழ்வை பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்ற நான்கு சீரான படிநிலைகளில் அமைத்துள்ளது. இதில், ஒவ்வொரு நிலையையும் நிறைவாக வாழ்வதே வாழ்க்கை. மேலே குறிப்பிட்ட நான்கு நிலைகளில் பெரும்பாலானவர்கள் தேர்ந்தெடுப்பது இல்லறத்தைத் தான்."இல்லறமல்லது நல்லறமன்று' என்பார்கள். இல்லறத்துக்கு அஸ்திவாரம் தாம்பத்யம். இந்தத் தாம்பத்ய உறவில் ஏற்படும் சிக்கல்களுக்கான தீர்வையும் உளவியல் ஆலோசனைகளும் இந்நூலில் உள்ளன.இந்நூலில் எப்போதிலிருந்து செக்ஸ், திருமணத்தில் செக்ஸ், கர்ப்பக்காலத்தில் செக்ஸ், வக்கிரமான செக்ஸ், மாறுபட்ட செக்ஸ், பேச்சில் வக்கிரம், தொலைபேசியில் விரசம், இயந்திரத்தனமான செக்ஸ், செக்சுக்கு அடிமை, ஓரினச்சேர்க்கை, முதுமையில் செக்ஸ், முதுமையில் முடியுமா போன்ற அந்தரங்கமான சந்தேகங்களுக்கு அறிவியல் பூர்வமான விளக்கங்களை நூலாசிரியர் அளித்துள்ளார்.தாம்பத்யத்தில் சிக்கல் இல்லாதவர்களுக்கும் இந்நூல் பெரிதும் பயன்படக்கூடியது. மனித மனத்தின் பல சிக்கல்களை விடுவிப்பதாக இருக்கிறது.இரண்டாவது நூலான "எஸ்' செக்ஸ் - சிக்கல்கள் - தீர்வுகளில் என்ற நூலில் பாலியல் சார்ந்த தெளிவை ஏற்படுத்தும் நூல்.பாலியல் பற்றிய பொதுவான புரிதல் பல தவறான அநுமானங்களையும் அறியாமையையும் கொண்டதாகவே இருக்கிறது. பாலியல் சிக்கல்களினால் தாம்பத்யம் சிதைந்து கசந்துபோன வாழ்க்கையை மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அவஸ்தைப்படுபவர்கள் அநேகம் பேர்.பாலியல் சிக்கல்களை வெளிப்படையாகப் பேச, ஆலோசனை கேட்க கூச்சப்படும் சூழ்நிலை பலர் வாழ்வை நரகமாக்குகிறது.இந்நூலில் சல்லாபத்தின் அவசியம், பின் சல்லாபத்தின் தேவை, பணியிடத்தில் பாலியல் தொல்லை, குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை, பெண்களின் ஆர்வம், ரத்த அழுத்தம், கொழுப்பு மிகுதி, சர்க்கரை நோய் செக்சை பாதிக்குமா?, ஊனமுற்றோர் செக்ஸ், மனவளர்ச்சி குன்றியோர் செக்ஸ், மனநோயும் செக்சும், பழி தீர்க்க செக்ஸ்?, புகையிலையின் தாக்கம், எத்தனை முறை, எவ்வளவு நேரம், உச்சம் அடைதல், உடல் அளவுகள் ஆகியவை பற்றி அறிவியல் பூர்வமான விளக்கங் களை கண்டறியலாம்.