நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 122. விலை: ரூ.50).
மேடைப் பேச்சுக் கலையை, மென்மையாய் விளக்கி, அதன் தன்மையை விவரித்து, அந்தக் கலையில் மேன்மை பெறச் செய்யும் மேடைப் பாடநூல்!பேசுவது முன்பாக தயாரிப்பது எப்படி? திட்டமிடுவது எப்படி? துணிவை வரவழைப்பது எப்படி? காலக்கட்டுக்குள் அருவி போல் கொட்டி, அனைவரையும் நிமிர வைப்பது எப்படி? என்று 15 தலைப்புகளில் விளக்கியுள்ளார்."ழ' "ல' "ள' ஆகிய ஒலி உச்சரிப்புகள் இன்றைய சில பேச்சாளருக்கு சரியாக இல்லாததை சரியாகக் குறிப்பிட்டு அதைத் திருத்த வழிகாட்டியுள்ளார்.இவரது சில மேடை அனுபவங்களும், மேற்கோள் சினிமா பாடல்களும், சில இடங்களில் மணி அடித்த பிறகும் பேசும் பட்டிமன்றப் பேச்சுப் போல "மிகை'யாக உள்ளது. சிறந்த பேச்சாளர்களின் பட்டியலில் இன்று கொடி கட்டிப் பறக்கும் பேச்சாளர் சு.கி.சிவம் போன்றவர்கள் விடுபட்டுள்ளனர். மேடைத் தமிழ்ப் பயணத்துக்கான கால அட்டவணை நூல்!