கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. (பக்கம்: 144).
பனித் திரை, உலகை மூடியிருக்கும் மார்கழி மாத அதிகாலை நேரத்தில், பாகவதர் பாடும், பக்திப் பாடல்களைக் கேட்டால் முதுகுத் தண்டு சிலிர்க்கும். ஆனந்த பரவச நிலை சித்தரிக்கும்.""பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியடா!'' என்று பாடினார் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை."பக்திப் பாட்டுக்கு ஒரு பாடகர் எம்.கே.டி.,!' என்று நாம் சற்றும் தயங்காமல் சொல்லி விடலாம்! கேட்பவர் செவிகளில் தேன் பாய்ச்சும் தங்கக் குரல் வேந்தர்! கந்தர்வ கான ஏழிசை மன்னர்!அந்த மகா கலைஞனின் வாழ்க்கையில் நேர்ந்த இன்ப அதிர்வுகளையும் இன்னல் தந்த சரிவுகளையும் - மனம் உருகச் சொல்லும் அற்புத நூல்!ஜெ.ராம்கியின் தனிப் பெரும் சாதனை.