விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோயம் புத்தூர்-641001. (பக்கம்: 168)
வார இதழ் ஒன்றில் தொடர் கட்டுரையாக வந்து பலரின் பாராட்டை பெற்ற நகைச்சுவைத் தொடர் இது. இப்பொழுது புத்தக உரு பெற்றிருக்கிறது. ஆசிரியர் நாடறிந்த நகைச்சுவையாளர். இளம் வயதிலிருந்து சினிமாவுடன் ஏற்பட்ட பலதரப்பட்ட அனுபவங்களை மிக்க நகைச்சுவையாக விவரித்திருக்கிறார். இத்துடன் தமிழ்ச்சினிமாவின் சரித்திரம் சார்ந்த சுவையான குறிப்புகளையும் ஆங்காங்கே தூவிக் கூடுதல் சுவையை ஊட்டியிருக்கிறார். படித்து மகிழ வேண்டிய நூல்.