வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 96)
சென்னையிலிருந்து, கனடா நாட்டிற்கு சமீபமானதும், அமெரிக்காவின் ஓர் அங்கமுமான அலாஸ்காவிற்கு முறையாகத் திட்டமிட்டுப் புறப்பட்டது முதல் சுகபத்திரமாகத் தாயகம் திரும்பும் வரையிலான நிகழ்வுகள் யாவும் "வீடியோ' வில் பதிவு செய்ததற்கு ஒப்பாக நினைவலைகள், இந்நூலில் ஓடவிட்டுள்ளார் ஆசிரியர். இதன் பிரதான அம்சம் பசிபிக் கடலில், 14 தளங்களைக் கொண்ட மிதக்கும் சொகுசுக் கப்பலில் "ஸெரினேட் ஆப்த ஸீஸ்' எனும் பெயருடைய இரண்டாயிரம் மைல்கள் 12 நாட்கள் பிரயாணம் செய்த புதுமையான அனுபவம், 2,500 பயணிகளையும், 900 பணியாளர்களையும் ஏற்றிச் செல்லவல்ல, பிரமிக்க வைக்கும் நட்சத்திர ஓட்டலைப் போன்ற இக்கப்பல் சாப்பாட்டு வசதிகள், திறந்தவெளி நீச்சல் குளம், பல்பொருள் அங்காடிகள், அனைத்து கேளிக்கைகள், சூதாட்ட அரங்கங்கள் கொண்டவை! மேலும், இரண்டு மணி நேர ஹெலிகாப்டர் பயணத்தின் போது 14 ஆயிரம் அடி ஆழமான "கிளேசியர்' எனப்படும் உறைபனிப் பள்ளத்தாக்கினை வெகு அருகில் பார்த்த அபூர்வ அனுபவமும் உண்டு.ஐந்து திமிங்கலங்கள் ஒன்று சேர்ந்து, அணி வகுத்து மீன் வேட்டையாடியதைக் கண்டுகளித்தல்.இத்துடன் அலாஸ்கா குறித்த பூகோளம், வரலாறுகள் மற்றும் இந்த சொகுசுக் கப்பல் பற்றிய பல்வேறு தகவல்கள், யாவும் நூலாசிரியர் விறுவிறுப்பாகவும், நகைச்சுவையைக் குழைத்தும் வழங்கியுள்ள பாணி வாசகர்களை வெகுவாக ஈர்த்து விடும்!இந்நூலைப் படித்த பின்னர் "ஆஹா... அலாஸ்கா மீது காதல் வந்திருச்சு'ன்னு நமக்கும் பாடத் தோன்றுகிறது.