மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-108. (பக்கம்: 304).
நாற்பதுகளின் தொடக்கத்திலிருந்து அறுபத்து மூன்று ஆண்டு வரை திரையில் கர்நாடக இசையை மக்கள் இசையாக ஆக்கிய சங்கீத மேதையாக சங்கீத முடிசூடா மன்னராக விளங்கியவர் ஜி.ராமநாதன்.ஆர்யமாலா, உத்தமபுத்திரன், சிவகவி, ஹரிதாஸ் படங்கள் முதல் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் முதலிய நூற்றுக்கணக்கான படங்களில் நல்ல கருத்துப் பாடல்களுக்கு நாத சுகம் தந்த இசைநாயகர் ஜி.ராமநாதன் குறித்து கலைமாமணி வாமனன் இந்த அற்புத வரலாற்று நூலை எழுதியுள்ளார். பத்தாண்டுகளுக்கு மேல் தகவல்கள் பல சேகரித்து தரமான வரலாற்று நூலாக வடித்துள்ளார்.சென்ற தலைமுறையின் மேதைகளை இனம் காட்டும் நல்ல முயற்சியாக இந்நூல் எழுதியது பெரிதும் பாராட்டுக் குரிய நன் முயற்சி.