விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை -2.
"இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்!'
-எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட பாடல் வரிகள் இவை. அந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்து, அவர்களது நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர்.எம்.ஜி.ஆர்., பற்றியும், அவரது வள்ளல் தன்மையையும், அவரது திறமைகளைப் பற்றியும் எத்தனையோ பேர், எத்தனையோ புத்தகங்கள் எழுதினாலும், படிக்கப் படிக்க திகட்டாதவை அவை. இதில், லேட்டஸ்ட் வரவான இந்த புத்தகத்தில், இதுவரை கேள்விப்படாத பல சுவையான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதற்கு பக்கபலமாக வெளியாகியுள்ள அபூர்வ புகைப்படங்களும், புத்தகத்திற்கு மேலும் மெருகூட்டுகிறது!கே.பி.ராமகிருஷ்ணன், தன் நினைவு பெட்டகத்திலிருந்து கூறிய விஷயங்களை எளிய நடையில் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் தொகுத்தளித்துள்ளார் எஸ்.ரஜத்.தினமலர் - வாரமலர் இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூலான இது, எம்.ஜி.ஆரை பற்றி அறிந்து கொள்ள உதவும் நூல்களில் முன்னுரிமை பெறும் என்பது நிச்சயம்.