திருமகள் நிலையம், 16(55), வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 560. விலை: ரூ. 250).
சிலப்பதிகாரத்திற் குப் பல உரை நூல் கள் தோன்றியுள்ளன. உ.வே.சாமிநாதய்யர் காலம் முதல் தற்
காலம் வரை உரைநூல் கள் வந்து கொண்டிருக்கின்றன. மாறும் காலங்களுக்கு ஏற்ப உரை எழுதும் முறையிலும் சில மாற்றங்களைக் காண முடிகிறது. தெளிவுரை, சிறப்புரை, குறிப்புரை என்னும் மூன்று பிரிவுகளில் இந்த உரைநூல் எளிய நடையில் உரை வழங்கியுள்ளது.
இந்த உரைநூலில் இடம் பெற்றுள்ள சிலப்பதிகார மூலப்பகுதி முழுவதும் பொருள் விளங்குமாறு பதம் பிரித்துத் தரப்பட்டுள்ளது சிறப்பாகும். முன்பே மர்ரே பதிப்பில் பதம் பிரிக்கப் பட்டுள்ளதை இந்த பதிப்பிலும் பின்பற்றியிருக்கின்றனர்.
புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்னும் மூன்று காண்டங்களின் கதைச் சுருக்கத்தை முதலில் தந்துள்ளனர். எனவே, புதிதாகச் சிலப்பதிகாரத்தைப் படிக்க நினைப்பவர்கள் கதை நிகழ்வைப் புரிந்து கொண்டு படிக்கும்போது எளிதாக இருக்கும். இந்தக் கதைச் சுருக்கத்தைத் தொடர்ந்து இளங்கோ அடிகளின் வரலாறு தரப்பட்டுள்ளது. மேலும் சிலப்பதிகாரத்தில் நினைவில் கொள்ள வேண்டிய அடிகளையும் இந்த பதிப்பில் தொகுத்துத் தந்துள்ளனர்.
தடித்த அட்டைக் கட்டுடன் பல வண்ணத்தில் அச்சிடப்பட்டுள்ள அட்டை அனைவரையும் கவரும். ஆய்வாளருக்கும் இலக்கியம் படிப்போருக்கும் உதவும் வகையில் அமைந்துள்ள இந்தச்சிலப்பதிகார உரை நூலை அனைவரும் போற்றுவர்.