நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 150.)
தமிழ்ச் சமூகத்தில் சாதி காலங்காலமாக நிலவி வருவதை இந்த நூல் இலக்கிய ஆதாரங்களோடு எடுத்துரைக்கிறது. சாதி எனும் வட சொல்லிலிருந்து தான் சாதி எனும் சொல் தமிழுக்கு வந்தது எனும் கருத்தை நூலாசிரியர் மறுத்துள்ளார். பெரும்பாணாற்றுப் படையில் சாதி எனும் சொல் தற்காலப் பொருளில் இடம் பெற்றிருப்பதை விளக்கியுள்ளார்.
குகையில் மனிதன் வாழ்ந்த காலம் முதல் பெண்கள் அனுபவித்த தீட்டுக் கொடுமைகளையும் இந்த நூலில் தெளிவாக விளக்கியுள்ளார் ஆசிரியர். குகையில் மனிதன் வாழ்ந்த காலத்தில் பெண்ணைத் தீட்டு என்று ஒதுக்கியதற்குக் காரணமாக விலங்கு அச்சத்தைக் குறிப்பிட்டுள்ளார். தீட்டுடைய பெண் வெளியே சென்றால் ரத்த வாடை பிடித்து விலங்குகள் வந்து அடித்து விட வாய்ப்பு உண்டு என்றே அந்தக் காலத்தில் வெளியே வரத் தடை விதிக்கப்பட்டிருந்தது என்று தெரிவித்துள்ள கருத்து ஏற்றுக் கொள்ளும் வகையில் உள்ளது. மேலும், யாழ்ப்பாணத் தமிழர்களின் பயன்பாட்டில் இருக்கும் துடக்கு எனும் சொல்லையும் ஆராய்ந்து விளக்கியுள்ள தன்மை பாராட்டுக்குரியது.