ராஜாராம் மோகன்ராய் பதிப்பகம், 5, நான்காவது குறுக்குத் தெரு, மகாத்மா காந்தி சாலை, பட்டாபிராம், சென்னை-72. (பக்கம்: 128.)
திருக்குறளில் மனித உரிமைகள் சொல்லப்பட்டுள்ளன. மேலாண்மைத் தத்துவங்கள் கூறப்பட்டுள்ளன. உளவியல் உரைக்கப்பட்டுள்ளது. பொதுவுடமை பூத்துக் குலுங்குகிறது. அதை அடித்தளமாக வைத்து நாம் அந்த அந்தத் துறை நூல்களை எழுதவில்லை என்பதைச் சுட்டிக்காட்டவே இந்நூலை எழுதியுள்ளேன் என ஆசிரியர் இந்த நூல் எழுதிய காரணத்தை கூறியுள்ளார். இந்த நூல் மூலம் அந்தக் குறை தீர்க்கப்பட்டுள்ளது. அதற்காக ஆசிரியரை நிச்சயம் பாராட்டலாம்.