நியூ செஞ்சரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்ரியல் எஸ்டேட், சென்னை-98. (பக்கம்: 120.)
சங்க இலக்கியத்தில் நால்வகை நிலங்களில் வேளாண் பொருளாதாரத்திற்கு மருதமும், வணிகப் பொருளாதாரத்திற்கு குறிஞ்சி, முல்லையும் சுட்டப்பட்டாலும், எக்காலத் திற்கும் அடிப்படை ஆதாரமான பொருளாதாரமாக வேளாண் பொருளாதாரமே இருந்து வந்துள்ளது என்பதை ஆய்வு செய்துள்ளார் நூலாசிரியர்.உழுது உண்போர், உழுவித் துண்போர் என வேளாண் சமுதாயத்தைப் பாகுபடுத்தி வேளாண்மையின் உயர்வு, இழிவு ஆகியவற்றையும் சங்க இலக்கியங்கள் மூலம் உரைத்துள்ளார்.
செந்நெல் முதுகுடியினர் என்று அழைக்கப்படும் வேளாண் சமுதாயம் பற்றிய விரிவான ஆய்வு நூல் இது.