நர்மதா பதிப்பகம், தி.நகர், சென்னை-17.
(பக்கம்: 184).
போட்டி மனப்பான்மை மிகுந்த தற்கால அலுவலகப் பணிகளில், செய்யும் வேலை யை சிறப்பாக கண்ணைக் கவரும் வகையில் மேலதிகாரிகள் முன் தர வேண்டி உள்ளது. இதற்குத் தக்க துணை தருவது `பவர் பாய்ண்ட்-2000'!
எவ்வளவு முன்னேற்றமற்ற துறைகளில் இருந்தாலும் ஒவ்வொரு அதிகாரியும் தத்தமது பணிகளின் பயன்களை தாமே செய்ய நேருகிறது. அந்தரங்க காரியதரிசி உதவியை நாடாமல் இதை அவர்களால் செய்ய இயலவில்லை. இக்குறையை நிறை செய்ய வெளிவந்துள்ளது இந்நூல்.
அடிப்படை அம்சங்கள், சொல் விளக்கங்கள், தொடக்க முறை, மெனு விளக்கம், ஷார்ட்மெனு, ஹெல்ப் ஸ்கிரீனுடன் வேலை செய்தல், டிசைன் டெம்பிளேட், பார்மட்டிங் செய்தல், டெக்ஸ்டை இம்ப்போர்ட் செய்தல், டிராயிங் கால் அவுட்ஸ், ஆப்ஜெக்ட்டை லைன் கலரை மாற்றம் செய்தல், படங்களை நுழைத்தல், க்ளிப் போர்ட்டுடன் கிராபிக்ஸ்சை நுழைத்தல், டேட்டாஷீட் விண்டோ, அனிமேஷன் வரிசையை மாற்றுதல் என ஏழு அத்தியாயங்களாக 80 பத்திகளாக கணினி திறமையின் படங்களோடு ஆசிரியை விளக்கி உள்ளார். கணினியைத் துவக்கி இப்புத்தகத்தைத் திறந்து வைத்து செயல்பட ஆரம்பித்தால், பவர் பாய்ண்ட் வல்லுனர் பக்கத்தில் இருந்து வழிகாட்டுவது போல் அமையும்.