நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை-600017 தொலைபேசி எண்: 2433439 (விலை ரூ.350.00, பக்கங்கள்: 520)
கீரனூர் நடராஜன் என்ற வரகவி எழுதிய சோதிட நூல் , மிக அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இலக்கிய நூலுக்கு விளக்கம் தந்த ஆசிரியை பணி போற்றுதற்குரி யது. அதனால் பலன்கள் தெளிவு அதிகரிப்பதை நூலைப் படிக்கும் அனைவரும் உணரமுடிகிறது. இலக்கின பாவம், முதல் 12 பாவங்கள் பற்றிய பலன்களும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.மேலும், எந்த கிழமையில், எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துன்பங்களை சந்திப்பர், எந்த ஓரை பிறந்தால் தனவரவுகள் கிட்டும், நற்பலன்கள் மற்றும் தீயபலன்கள் தரும் கோள்களின் நிலைகள் போன்றவையும் இடம் பெற்றுள்ளன. உப கோள்களால் ஏற்படும் நன்மை தீமைகள், எப்படிபட்ட ஜாதக அமைப்பு கொண்டவர்களுக்கு ஆண் குழந்தை அதிகமாகவும், பெண் குழந்தை அதிகமாகவும் பிறக்கும் என்பதற்கான விளக்கங்களும், பொதுப்பலன் என்றால் என்ன? சிறப்பு பலன்கள் என்றால் என்ன? சிறப்பு பலன் எப்போது நடக்கும் என்பதற்கான விளக்கங்களும் கூறப்பட்டுள்ளன.
தம்பதியர் குழந்தையில்லாமல் இருப்பதற்கு மூன்று சாபங்கள் காரணம் என்றும், அந்த சாபங்களுக்கான பரிகாரங்களையும் கூறுகிறார். எப்படிப்பட்ட ஜாதகிக்கு இரண்டு கணவர்கள் அமைவர்? திருமணம் செய்யும் இடம், ஜாதகனின் ஒழுக்கம், மனைவியின் கற்பு நெறி போன்றவையும் நூலில் சொல்லப்படுகின்றன. இந்த நூலை கற்று அறிந்தால், ஜோதிடத்தில் நல்லதொரு தெளிவைப் பெறலாம் . அடிப்படை ஜோதிடம் கற்றவர்கள், தமிழ்நயம் தெரி ந்து கொண்டிருந்தால், சில நூறு பாடல்களை உணர்ந்து, கண்மூ டித்தனமாகப் பலன் கூறும் மாயையில் இருந்து விடுபடலாம். இந்த நூலை படித்து அறிய வேண்டியது ஏராளம். முகப்பு அட்டை மற்றும் அழகான அச்சு, தெளிவான விளக்கம் ஆகியவை இந்நூலின் பெருமையை அதிகரி க்கிறது.