முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்:432)
கம்பர் இயற்றிய இராம காதையை வழி நூலாகக் கொண்டு அதன் சார்பு நூலாக சீர்காழி அருணாசலக் கவிராயர் இயற்றியது, `இராம நாடகக் கீர்த்தனை' என்ற இந்த ஒப்பற்ற நூலாகும். பொருள் ஆழத்திலும், சொற்சுவையிலும், பேச்சுத் தமிழிலும், சிறந்ததான இந்நூல், பல ஆண்டுகளுக்குப் பின் தற்போது வெளிவந்துள்ளது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகும்.
இந்நூலில் உள்ள பல பாடல்களை மேடைகளில் பலர் பாடி பிரபலப்படுத்தியுள்ளனர்.
ஷ்ரீராமச்சந்திரனுக்கு ஜயமங்களம் (பக்.32), ராமனுக்கு மன்னன் முடி தந்தாலே (பக்.67), சீதையைக் கண்டானே அனுமன் (பக்.182), ராமசாமி தூதன் நான் அடா - அடடா ராவணா (பக். 213), ராமனைக்
கண்ணாரக் கண்டானே (பக்.234) முதலான பாடல்களை எடுத்துக்காட்டாக கூறலாம். ஆன்மிகவாதிகள், இசை
வாணர்கள் தமிழ் அறிஞர்கள் போற்றும் இந்நூலை அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும்.