கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான இணைப்பு தான் புத்தகம் என்பதை விவரிக்கும் நுால். தலைமுறைகள் மற்றும் கலாசாரங்களுக்கு இடையிலான பாலமாக தடுக்கி விழுந்தால் தாங்கி பிடிக்கவும், வருந்தி கிடந்தால் வழிகாட்டவும் பயன்படும் என விளக்குகிறது.
வாசிப்புப் பழக்கம், மனிதனை அறிவு உள்ளவனாக மாற்றும் ஆயுதம். மனித இனம் மேம்படவும், புதிய சிந்தனை உருவாகவும், கற்பனை வளம் பெருகவும் துாண்டுகோலாக அமைவது புத்தகம் என அதன் அவசியத்தை பட்டியலிடுகிறது.
இந்திய நுாலகத் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் பற்றியும், இந்தியாவில் முதன்முதலாக நுாலகச் சட்டம் இயற்றியது தமிழகம் என்பதையும், தமிழக அரசு நுாலகத் துறைக்கு ஆற்றி வரும் பணிகளையும் விவரிக்கிறது.
புத்தக கண்காட்சிகளும், நாளிதழ்களும் வாசிப்புப் பழக்கத்தை பரவலாக்கி வருவது மன நிறைவு தருவதாக குறிப்பிடுகிறது. வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நுால்.
–
புலவர் சு.மதியழகன்